en kalati sarukkinra velaiyile (thiya94:18-19)

என் காலடி சறுக்கின்ற
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் காலடி சறுக்கின்ற வேளையிலே (தியா94:18-19)
உம் பேரன்பு என்னை தாங்கிடுதே
என் மனதிலே கவலைகள் பெருகும் போது
என் உள்ளத்தை ஆறுதல் படுத்துகிறீர்
என் மனதிலே கவலைகள் பெருகும் போது
என் உள்ளத்தை ஆறுதல் மகிழ்விக்கிது
என்னை அமைதியின் கருவியாய் மாற்றி
வாழவைக்கின்றீர் வாழவைக்கின்றார்
என்னை வாழ வைக்கின்றார்
ஆண்டவர் எனக்கு அரணானார்
புகலிடம் தரும் பாறையானார்
துன்ப நாட்களில் என் அமைதியானார்
ஆபத்து நேரங்களில் துணையானார்
இயேசுவே எனக்கு வழியானார்
அவரே எனக்கு ஜீவனானார்
அவர் என்னை ஒருபோதும் தள்ளி விடார்
எதிலும் எப்போதும் கைவிடார்
என் கால்கள் இடறாமல் பார்த்துக் கொள்வார்
போய் வரும் வழிகளைக் காத்திடுவார்
இயேசுவின் நிழலிலே மறைத்திடுவார்
நிரந்தரம் அவரோடு வைத்துக் கொள்வார்
கிறிஸ்து வாழ்வளிக்கின்றார் – 3
என் காலடி சறுக்கின்ற பாடல் வரிகள், En Kaladi Sarukinta Lyrics