1. en jepavelai inpamam

என் ஜெபவேளை இன்பமாம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

1. என் ஜெபவேளை இன்பமாம்
அப்போ தென் துக்கம் மறப்பேன்
பிதாவின் பாதம் பணிவேன்,
என் ஆசை யாவும் சொல்லுவேன்
என் நோவு வேளை தேற்றினார்,
என் ஆத்ம பாரம் நீக்கினார்
ஒத்தாசை பெற்று தேறினேன்
பிசாசை வென்று ஜெயித்தேன்
2. என் ஜெபவேளை இன்பமாம்
மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்
மன்றாட்டைக் கேட்போர் வருவார்,
பேர் ஆசீர்வாதம் தருவார்;
என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்
என் பாதம் பற்று ஊக்கமாய்
என்றோர்க் கென் நோவை சொல்லுவேன்
இவ்வேளை (யை) நான் வாஞ்சிப்பேன்
3. என் ஜெபவேளை இன்பமாம்
ஆனந்தக் களிப்படைவேன்,
பிஸ்கா சிகரம் ஏறுவேன்
பேரின்ப வீட்டை நோக்குவேன்;
இத்தேகம் மாறி ஏகுவேன்
விண் நித்ய வாழ்வைப் பெறுவேன்;
தெய்வீக வீட்டில் வசிப்பேன்
வாடாத கிரீடம் சூடுவேன்