en jeevan umakkulle marainthu irukkirathu

என் ஜீவன் உமக்குள்ளே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் ஜீவன் உமக்குள்ளே மறைந்து இருக்கிறது
என் சுகம் பெலம் யேசுவே எல்லாம்
உம்மிடம் இருந்து வருகிறது
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
1.உம் சித்தம் அல்லாது ஓர் முடியும் உதிர்வதில்லை
உம்மாலே அவை எல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது
உம் உத்திரவின்றி எந்தனின் வாழ்வில்
ஒன்றுமே அணுகியே வருவது இல்லை – என் ஜீவன்
2.அனுமதி நீர் அளிக்க நன்மைகள் தீமைகளோ
அடியேனின் வாழ்வினிலே வந்திடுமேயானால்
அன்புள்ளம் அதை அனுமதித்ததினாலே
ஆனந்தம் கொள்ளுவேன் அவற்றிற்கெல்லாமே -என் ஜீவன்
3. ஆத்தும ரட்சகனே என் ஆறுதல் நீர் தானே
ஆலோசனை எனக்கு தினம் அருள்பவர் நீர் தானே
பயப்படாதே நான் உன் தேவன் என்று
பகர்ந்து தைரியம் ஈயும் பரமனும் நீயே -என் ஜீவன்
என் ஜீவன் உமக்குள்ளே பாடல் வரிகள், En jeevan umakulae Lyrics