en jeeva vaasal yesuvae

என் ஜீவ வாசல் இயேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் ஜீவ வாசல் இயேசுவே
நல் மேய்ப்பர் என்றும் நீர் தானே-2
உமக்குள்ளே சென்று உள்ளும் புறம்பும்-2
மேய்ச்சலைக்கண்டிடுவேன்
நானும் பயமின்றி வாழ்ந்திடுவேன்-2
வாசலே வாசலே
மேய்ப்பரே உம்மை நேசிப்பேன்-2
மேய்ப்பரே உம்மை நேசிப்பேன்
1. உம் தொழுவம் நான் சேர்ந்தவன் அல்ல
ஆனாலும் நீர் சேர்த்துக்கொண்டீர்-2
ஓநாய்கள் சூழ்ந்த போதும்
உம் ஜீவனை தந்து மீட்டர்-2-வாசலே
2. சோர்ந்து போன நேரமெல்லாம்
தோளில் என்னை தூக்கிக்கொண்டீர்-2
பெலனற்ற வேளையெல்லாம்
உம் வார்த்தையால் தேற்றிடுவீர்-2-வாசலே
3.உம் சத்தத்தை நான் கேட்டிடுவேன்
உம் பின்னே நான் சென்றிடுவேன்-2
என்னை நீர் நன்கறிவீர்
எனக்காகவே யாவும் செய்வீர்-2-என் ஜீவ வாசல்