en ila vayathin pavangkalai – En Elavayathin Paavangalai

என் இள வயதின் பாவங்களை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் இள வயதின் பாவங்களை – En Elavayathin Paavangalai
என் இள வயதின் பாவங்களை நினையாதிரும் தேவா
உம் தயவினாலும் கிருபையினாலும் என்னை நினைத்தருளும்
என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது ஆ…
என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது
என் துன்பத்தைப் பார்த்து வருத்தத்தை நினைத்து பாவங்களை மன்னியும்
கர்த்தாவே உம் வழிகளை எனக்குத் தெரிவியும் ஆ…
கர்த்தாவே உம் வழிகளை எனக்குத் தெரிவியும்
உம் பாதைகளை எனக்குப் போதித்து சத்தியத்தில் நடத்தும் (2)
கர்த்தாவே என் ஆத்துமாவை உம்மிடம் உயர்த்துகிறேன் ஆ…
கர்த்தாவே என் ஆத்துமாவை உம்மிடம் உயர்த்துகிறேன்
நான் உம்மையே நம்பியிருப்பதினால் வெட்கப்படுவதில்லை (2)