En Belannil naan saaraamal

என் பெலனில் நான் சாராமல்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

En Belannil naan saaraamal – என் பெலனில் நான் சாராமல்
என் பெலனில் நான் சாராமல்
உம்மில் நான் நிலைத்திருக்க
கற்றுத்தாருமே
நீர் விரும்பும் கனி கொடுக்க
உம்மில் நான் நிலைத்திருக்க
கற்றுத்தாருமே-2
உம் பாதம் பணிந்து சேரும் முன்னே
என் நாட்கள் வீணாய் போனதே
உம் சமூகம் விட்டு வேறெங்கு செல்வேன்
என் வாழ்நாள் எல்லாம் பாடுவேன்
நீர் மற்றும் போதுமே
உம் பாதத்தில் அமர்ந்திருப்பேன்
என்னை விட்டு நீங்காத நல்ல பங்கு நீர்தானே – நீர் மற்றும்
1.உம் சித்தம் ஒன்றே நான்
தினமும் செய்திடவே அர்ப்பரணிக்கிறேன்
நடக்கும் என் வழிகளிலெல்லாம்
உம்மையே சார்ந்திருக்க கிருபை செய்யுமே -2
என் திட்டம் எல்லாம் வீணானதே
உம் சித்தம் இல்லாமல் போனதே
உம் மகிமைக்காக என்னை மாற்றிடுமே
நான் நித்தம் உம்மை போற்றுவேன்- நீர் மற்றும்
கிருபை தாருமே உம் கிருபை தாருமே
உம் அன்பில் நான் வாழ கிருபை தாருமே
கிருபை தாருமே உம் கிருபை தாருமே
உமக்காக நான் வாழ கிருபை தாருமே