En Belaney En Durugamey

என் பெலனே என் துருகமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் பெலனே என் துருகமே
என்னை நிலைப்படுத்தும் என் நிலையே
நான் மறையும் என் புகலிடமே
உம்மை நான் என்றும் ஆராதிப்பேன் (2)
ஆராதனை ஓ ஆராதனை
நேசருக்கு என்(இயேசுவுக்கு) ஆராதனை(2)
1.பாதையை திறந்து நடக்கச் செய்தீர்
வெற்றியை தந்து எழும்பச் செய்தீர்
தலையைஉயர்த்தி நடக்கச் செய்தீர்
என்றும் உமக்கே ஆராதனை(2) -ஆராதனை
2.முடிந்ததை துவக்கி செழிக்கச் செய்தீர்
மறந்ததை மீட்டு திரும்பத் தந்தீர்
உடைந்ததை திரும்ப ஒட்ட வைத்தீர்
என்றும் உமக்கே ஆராதனை(2) -ஆராதனை