en aaththuma nesaram iyesu – En aathuma nesaram Yesu

என் ஆத்தும நேசராம் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் ஆத்தும நேசராம் இயேசு – En aathuma nesaram Yesu
என் ஆத்தும நேசராம் இயேசு
என்னை காத்து நடத்திடும் இயேசு
தம் நேத்திரம் போல் எம்மை காத்து
என்னை ஆசீர்வதித்திடும் இயேசு
ஈந்திடுவேன் என் உள்ளத்தையே
தந்திடுவேன் காணிக்கையாய்
அல்லேலூயா ஆமென்
1.நான் பாவியாய் இருக்கையில் இயேசு
என்னை தாவி அணைத்தவர் இயேசு
என் ஜீவனை காத்தவர் இயேசு
எனக்காவியை ஈந்தவர் இயேசு
2.என் ஆறாத்துயரத்தில் இயேசு
எனக்காறுதல் அளிப்பவர் இயேசு
என் தேவனாய் வந்தவர் இயேசு
தம் ஜீவனைக் கொடுத்தவர் இயேசு