Emmathiram Lyrics

எம்மாத்திரம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீர் காண்பித்த தயவிற்கு பாத்திரனோ?
உம் அன்பின் அழைப்பை மறப்பேனோ?
சரணம் 1:
நன்மைகள் தினமும் காணச் செய்தீர்
உன் கரங்களின் கிரியைகள் ருசிக்கச் செய்தீர் – 2
உன் கிருபைகள் தினமும் புதிதல்லவோ
உம் இரக்கங்கள் வானத்தின் அளவல்லவோ -2
எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்…
எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்…
உம் அன்பை விளங்கிட முடியவில்லை
உம் தயவை விவரிக்க வார்த்தையில்லை -2
சரணம் 2:
தரிசனம் என்னில் வைத்தவரே
நான் மறப்பினும் நீர் அதை நினைத்திட்டீரே-2
நீர் நிறுத்தின இடங்கள் என் தகுதியல்ல
உன் கிருபையின் வெளிப்பாடு அவைகளல்லோ-2
சரணம் 3:
உலகில் என் வெற்றிகள் பெரிதல்லவே
உம்மோடு இருப்பதே நிறைவானதே-2
என் கண்களை மூடிடும் அந்நேரமே
உம் சமூகத்தில் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன்-2