Ellavatrilum Yesuvai Thuthippean Naan song lyrics

எல்லாவற்றிலும் இயேசுவை துதிப்பேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எல்லாவற்றிலும் இயேசுவை துதிப்பேன் நான்
எல்லாம் நன்மையாய், எப்போதும் நடந்திடும்
எல்லாம் நன்மையாய், முடிந்திடும்
கவலைகள் பறந்திடும், கஷ்டங்கள் தீர்ந்திடும்,
வேதனை விலகிடும் சோதனை நீங்கிடும் – எல்லாவற்றிலும்
யுத்தம் செய்ய கர்த்தரை துதித்தல்
யோசபாத் யோசனை
துதித்தார், யுத்தம் ஜெயித்தார்,
நானும் துதிப்பேன் ஜெபிப்பேனே – 2 கவலைகள்
சிறைக்குள் இருந்தும்
பவுல் ஷீலா துதித்து கட்டுகள் கழன்றன
சிறை போன்ற துன்பம் எதுவந்தபோதும்
துதிப்பேன் இயேசுவை – 2 கவலைகள்
எரிகோ மதிலைக் கண்டால் கலங்கேன்
துதிப்பேன் இயேசுவை
விழாமல் மதில் நின்றாலும் தொடர்ந்து
துதிப்பேன் வீழ்ந்திடும் – 2 கவலைகள்
கொடுத்தாலும் ஸ்தோத்ரம்
எடுத்தாலும் ஸ்தோத்ரம், மறுத்தாலும் ஸ்தோத்ரமே
கர்த்தரே கொடுத்தார், கர்த்தரே எடுத்தார்,
கர்த்தருக்கே ஸ்தோத்திரம் – 2 கவலைகள்