ellame mannuthanaya

எல்லாமே மண்ணுதானையா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எல்லாமே மண்ணுதானையா
எல்லாமே மாயைதானையா
சூரியனின் கீழே நடப்பதும் காண்பதுவும்
எல்லாமே மண்ணுதானையா
எண்ணிப்பார்த்தால் எல்லாமே மண்ணுதானையா
சிந்தித்துப் பார்த்தால் எல்லாமே மண்ணுதானையா
1. பையூரம் தாய் வயிற்றில் 10 மாதம் இருந்தும்
பொய்யூரம் இங்கு வந்து குழந்தையாக பிறந்ததுவும்
எத்தனை நாள் இருப்போம் என்று உத்திரவாதம் இல்லை
ஐயா சத்தியபரன் தேவன் தந்த ஜீவன் கூட இரவலையா
2. பொன்னாக மதிக்கப்படும் மண்ணான மாய உடல்
பூப் போல வதங்கிவிடும் ஜீவன் போனால் பூத உடல்
கருவோடு வந்ததையா ஆட்டம் போடும் திச உடல்
கருவாட்டுக்கு இருக்கும் விளை இதற்கில்லையே நாற்ற உடல்
3. மண்ணான உன்னை மீட்ட மாணிடராய் இயேசுவந்தார்
பொன்னான ஆத்துமாவை மரணத்திலே ஊற்றி விட்டார்
அவர் பாதம் வந்தவர்க்கு மோச்ச வழி காட்டுகின்றார்
ஆத்துமாவை மீட்டு மோட்சத்திலே வாழவைப்பார்