ellam neeye ethilum neeye

எல்லாம் நீயே எதிலும் நீயே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

எல்லாம் நீயே எதிலும் நீயே
இறைவன் இயேசுவே
என் உயிரும் நீயே உறவும் நீயே
உணர்வும் நீ இயேசுவே
நான் காணும் யாவும் எனதாகினாலும்
பொருளேதும் இல்லையே
உன்னோடு கலந்து உலகெல்லாம் கரைந்தால்
உயர்வாகும் என் நிலையே
உயிரோடு கலந்திடவா – என்
உணர்வோடு இணைந்திடவா
உனக்குள் நான் இருக்க எனக்குள் நீ இருக்க
மனதில் குறைகள் இல்லையே
இறைவா இறைவா இறைவா
புவி மீது நாமும் எது கண்ட போதும்
புன்னகை நிலைப்பதில்லை
புல் உலர்ந்து போகும் பூ உதிர்ந்து போகும்
உன் உறவு பொய்ப்பதில்லை
எம்முள்ளம் உனக்காக
என்றேதான் படைத்தாயே
உன்னை அடந்தாலன்றி உறவில் கலந்தாலன்றி
உண்மை மகிழ்ச்சி இல்லையே
இறைவா இறைவா இறைவா