Elai Enthan Jebathitku

ஏழை எந்தன் ஜெபத்திற்கு
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஏழை எந்தன் ஜெபத்திற்கு பதில் தரும் தேவனே
உம்மை விட்ட எனக்கு யாரப்பா
இந்த உலகிலே சொந்தம் பந்தம் எல்லாம் நீங்கப்பா
உம்மாலே எல்லாம் கூடுமே இயேசப்பா
கூடாதது ஒன்றுமில்லப்பா- 2
முடவனை நடக்கக்வைக்க உம்மாலே கூடும்
செவிடனை கேட்கக்வைக்க உம்மாலேகூடும் -2
கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2 (எழை
ஐந்து அப்பம் இரண்டு மீனையும்
ஐயாயிரம் பேருக்கு போஷித்தீங்கப்பா-2
சோர்ந்து போன மனிதனுக்கு உணவு தந்தவரே
சோர்ந்திடாமல் அனுதினமும் நடத்தி செல்பவரே-2
கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2
கடல் மேல் நடந்து வந்தவரே இயேசப்பா
கூடாதது ஒன்றுமில்லப்பா-2
காற்றையும் கடலையும் அடக்கி ஆள்பவரே
கடனை எல்லாம் நொடி பொழுது தீர்த்து வைப்பவரே-2
கூடாதது ஒன்றுமில்லப்பா-2
(ஏழை)