ekkangkal theernthitum neer vanthale – Aekkangal Theernthidum Neer vanthalae

ஏக்கங்கள் தீர்ந்திடும் நீர் வந்தாலே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஏக்கங்கள் தீர்ந்திடும் நீர் வந்தாலே – Aekkangal Theernthidum Neer vanthalae
ஏக்கங்கள் தீர்ந்திடும் நீர் வந்தாலே சோகங்கள் மாறிடும் நீர் சொன்னாலே (2)
அயராகு எழுவேன் உமக்காக வாழ்வேன்
உம் சித்தம் செய்திடுவேன் (2)
யார் என்ன சொன்னாலும் கலங்கிடேனே
உம் அன்பு ஒன்றே அது போதுமே (2)
வாழ்ந்தாலும் உமக்காய் மரித்தாலும் உமக்காய்
என் ஜீவன் உமக்குதான் (2)
தாயும் தகப்பனும் நீரல்லவோ
தோள்மீது சுமந்திடும் அன்பல்லவோ (2)
காண்பவர் நீர்தான் காப்பவர் நீர்தான்
உம் பிள்ளை நானல்லவோ (2)
காலங்கள் பல கடந்திட்டாலும்
விட்டு விலகாமல் நின்றிடும் துணையல்லவோ (2)
கண்ணீரை கண்டு கலங்காமல்
காத்து என்றென்றும் நடத்தவார் (2)
புகழ் பெருமை ஏதும் தேவையில்லை
சிரம் தாழ்த்தி பாடுவேன் என்றென்றுமே (2)
உம்மை உயர்த்துவேன் என்றும் போற்றுவேன்
புகழ்ந்து பாடிடுவேன் (2)
பாவி எனக்காய் நீர் பலியானீரே
இவ்வன்பிற்கு ஈடு இணையில்லையே (2)
வழுவாமல் காத்து இடறாமல் பிடித்து
பரலோகம் சேர்த்திடுவீர் (2)