ekipthukku karirul

எகிப்துக்கு காரிருள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எகிப்துக்கு காரிருள்
இஸ்ரவேலுக்கு இல்லையே -2
இஸ்ரவேல் என்பது தேவ ஜனம்
இஸ்ரவேல் என்பது தேவன் பிரியம் -2 – எகிப்து
எகிப்துக்கு வந்த வியாதிகள்
உன் எல்கைக்குள் நுழைவது இல்லையே
எகிப்தை வாட்டின வாதைகள்
உன்னை வாட்டுவதில்லை -2- எகிப்து
துரத்தும் சத்துருவின் சேனைகள்
உன் கண்முன்னே மூழ்கி மடியுமே
இன்று காணும் இந்த எகிப்தியனை
ஒரு போதும் காண்பது இல்லையே -2- எகிப்து
எகிப்திற்கு உண்டான சாபங்கள்
உன் குடும்பத்தில் பலிப்பது இல்லையே
பார்வோன் சுமத்தின பெரும் சுமைகள்
நீ சுமக்க தேவை இல்லையே -2- எகிப்து