Edukka Edukka Kuraiyaatha Paathiram Tamil Christian Song

எடுக்க எடுக்க குறையாத

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எடுக்க எடுக்க குறையாத பாத்திரம் நீர்
அள்ள அள்ள குறையாத கிருபை நீர்
மகிமை நீர், கிருபை நீர்
[யெகோவா-யீரே நீர், தேவையெல்லாம் நீரே நீர்]
யெகோவா-ராபா நீர், வியாதியின் மருந்தே நீர்]
1. பரலோகமே எந்தன் பண்டக சாலை
ஒரு நாளும் குறையாத பண்டக சாலை
பரலோகமே எந்தன் பொக்கிஷ சாலை
நற்கிரியை சேர்த்து வைக்கும் பொக்கிஷ சாலை
இயேசுவே தந்தையே, இயேசுவே தகப்பனே
[சோராமல் ஜெபித்திடுவேன், காத்திருந்து பெற்று கொள்வேன்
சோராமல் ஜெபித்திடுவேன், பெறும் வரையில் ஜெபித்திடுவேன்]
2. சிலுவையில் எம்மை பெற்று எடுத்தவரே
வசனமாம் ஞானப்பாலை கொடுத்தவரே
தேவ மைந்தன் இயேசுவை தந்தவரே
தேவைகளை நிறைவேற்றி முடிப்பவரே
இயேசுவே தந்தையே, இயேசுவே தகப்பனே
[சோராமல் ஜெபித்திடுவேன், காத்திருந்து பெற்று கொள்வேன்
சோராமல் ஜெபித்திடுவேன், பெறும் வரையில் ஜெபித்திடுவேன்]
3. இயேசுவே நீர் எங்கள் பரிகாரியே
உம் தழும்புகளால் சுகமானோம் வைத்தியரே
இயேசு நாமம் மரித்தோரை எழுப்பிடுதே
மரித்து போன உறுப்பெல்லாம் உயிர்த்திடுதே
இயேசுவே தந்தையே, இயேசுவே தகப்பனே
[சோராமல் ஜெபித்திடுவேன், காத்திருந்து பெற்று கொள்வேன்
சோராமல் ஜெபித்திடுவேன், பெறும் வரையில் ஜெபித்திடுவேன்]
4. நான் விதைத்த விதைகளெல்லாம் விளைவித்தீர்
பஞ்ச கால விதைகளெல்லாம் விளைவித்தீர்
வானத்தின் பலகணிகள் திறந்து விட்டீர்
தரித்திரனை செழிப்பனாக மாற்றி விட்டீர்
[இயேசுவே தந்தையே, இயேசுவே தகப்பனே]
[சோராமல் ஜெபித்திடுவேன், காத்திருந்து பெற்று கொள்வேன்
சோராமல் ஜெபித்திடுவேன், பெறும் வரையில் ஜெபித்திடுவேன்]