நீங்க மட்டும் இல்லனா – Neenga Mattum Illana

நீங்க மட்டும் இல்லனா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவே!!
நீங்க மட்டும் இல்லனா துக்கத்தில செத்திருப்பேன்
உங்க கிருபை மட்டும் இல்லனா
நிர்மூலமாய் இருப்பேன்-2
உங்க சமூகம்தான் எனக்கு எல்லாமே
உங்க பிரசன்னம் தான் எனக்கு போதுமே -2 நீங்க மட்டும்
1.நிந்தை அவமானங்களும் எண்ணற்ற காயங்களும்
நான் நம்பும் மனிதர்கள் எனக்கு தந்த பரிசப்பா-2
எத்தனையோ இரவுகள் தூங்கவும் முடியல
யாரிடமும் சொல்லி அழவும் தெரியல 2- உங்க சமூகம்
2.பணமிருந்தால் பாசங்களும் மனிதரின் வேஷங்களும்
நான் கண்ட காட்சிகளில் சிறப்பான ஒன்றுப்பா-2
நல்லவர்கள் யாரென்று அறிந்திட முடியல
யாரைத்தான் நம்புவது எனக்கும் தெரியல -2 உங்க சமூகம் தான்
3.என் ஆசை விருப்பங்களும் எதிர்பார்க்கும் நன்மைகளும்
கனவில் தோன்றும் காணல் நீர போலப்பா-2
அனுதின தேவைகள் ஏராளும் உண்டுப்பா
ஒருவரும் உதவிட முன்வரவில்லப்பா-2 உங்க சமூகம்
நீங்க மட்டும் இல்லனா பாடல் வரிகள், Neenga Mattum Illana lyrics