உம்மைப் போல் ஆகுமா – Ummai Pol Aaguma

உம்மைப் போல் ஆகுமா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
உம்மைப் போல் ஆகுமா ?
உம் அன்பைப் போல் ஆகுமா ?
உம்மைப் போல் யாருண்டு ?
உம் அன்பைப் போல் எதுவுண்டு ?- 2
சரணம்
பாவத்தில் அமிழ்ந்து மூழ்கினேன்
ஆழத்திலிருந்து கதறினேன். -2
பாவ அழுக்கைக் கழுவி என்னை
அணைத்து எடுத்து மன்னித்தீரே.-2 உம்மைப்போல்
பாசத்துக்காக நான் ஏங்கினேன்
பாரத்தோடு உம்மை நோக்கினேன்-2
ஆத்ம இரட்சிப்பை எனக்குத் தந்து
அன்போடு என்னை மீட்டீரே.-2 – உம்மைப்போல்
துன்பங்களால் நான் துவண்டேன்
சத்தமிட்டு உம்மைக் கூப்பிட்டேன்-2
மாறாத அன்பை எனக்குத் தந்து
ஆற்றி என்னைத் தேற்றினீரே 2 – உம்மைப்போல்