பாவியே பாவியில் பாவியே – Paaviyae Paaviyil Paaviyae

பாவியே பாவியில் பாவியே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
பாவியே, பாவியில் பாவியே, உனில் அன்புண்டோ?- சொல்
பாவியே, பாவியில் பாவியே.
அனுபல்லவி
கூவியே, கர்த்தருரைக்கிறார்; கூர்ந்துகேள், உள்ளிந்திரியமே;
பாவியே, என்கிறார் இயேசு பாவியாமுனையே பார்த்து –பாவி
சரணங்கள்
1.பாவத்தால் கட்டுண்டிருந்தாயே; பராபரனுட
கோபத்தால் காயமுங் கொண்டாயே;
தேவனை விட்டகன்றாய்; பாவ விருள் அடைந்தாய்;
பாவனையாக வுன்னைப் பவுசாக வைத்தவர்நானே, -பாவி
2.தாயுட அன்பு மாறுமோ? தன்னருமைப் பிள்ளையைத்
தயவுடன் அழைக்கமாட்டாளோ?
தாயுமே மறந்திட்டாலும், தயவை நான் மறப்பதில்லை;
நேயமே யுனை யோர்க்காலும் நினையாதே யிருப்பதில்லை -பாவி
3.என்னுடைய அன்பு மாறாததே; ஆகாய உயரமும்
என்னன்பை எட்டி முடியாதே;
பின்னுங்கேள்; பாதாளத்திலும் அன்பினுக்காழம் பெரியது;
எண்ணுமுன் சாவினுறுதி போல் என்னுட அன்பு முறுதியே, -பாவி
4.கிருபையின் கிரியை முடியவே, அதி சீக்கிரமாகவே
பெருமையாய் மகிமை காண்பையே
விருத்த வாசனத்திலேயே வீற்றுமே யிருப்பதற்கு
கர்த்தராம் என்னோடே நீ கனத்த பங்காளியாவாய்.-பாவி