பூர்வீகமான பெந்தெகொஸ்தே ஆவி – Poorvigamana Penthekosthae aavi

பூர்வீகமான பெந்தெகொஸ்தே ஆவி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
பூர்வீகமான பெந்தெகொஸ்தே ஆவி
அருளுவீர் தே…. வா
சரணங்கள்
1. அசுத்தத்தை அகற்றி விட்டுப் பரிசுத்தம் பெற்றிட
அருளுவீர் தே… வா
ஆதி ஆவி இப்போ – நலமுடன் – பூர்வீகமான
2. இருதயத்தில் இதை எடுத்திடாதிருக்கின்றோர்
காருண்யத்தில் இ… ன்று
இயேசுவின் பாதம் சேர – நலமுடன் – பூர்வீகமான
3. அந்தகார லோகத்தில் நாசத்திற் கோடுவோரை
பந்துவான இயே…சு
சொந்தமாய்ச் சேர்த்திடவே – நலமுடன் – பூர்வீகமான
4. சக்தியான சாட்சியாய் எங்கும் யான் கண்டிடவே
சக்தி நல்கும் தே… வா
இத்தினம் நின் தாசரில் – நலமுடன் – பூர்வீகமான
5. ஆயிரம் ஆயிரமாய் ஆத்துமாதாயஞ் செய்ய
அதிகாலை ஜீ…வன்
அடியாரில் அருளிடும் – நலமுடன் – பூர்வீகமான
பூர்வீகமான பெந்தெகொஸ்தே ஆவி பாடல் வரிகள், Poorvigamana Penthekosthae aavi lyrics