e aatu messa tevit annan arasananare

ஆடு மேச்ச டேவிட் அண்ணன்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

ஏ ஆடு மேச்ச டேவிட் அண்ணன் அரசனானாரே
அடிமையான டேனியல் அண்ணன் அதிபரானாரே – 2
பட்டப்படிப்பு தகுதி ஒன்னும் தேவையேயில்ல
உன் வாழ்க்கை தரம் உயர்வது அவரின் கையில – 2
எல்லாமே ஆகும் உம்மாலே ஆகும்
மனுஷரால் கூடாதது தேவனால் ஆகும் – 2
மாராவின் தண்ணீரோ மதுரமானதே
கானாவின் தண்ணீரோ ரசமுமானதே -2
கசந்து போன உன் வாழ்வை இனிமையாக்குவர்
முடிந்து போன உன் வாழ்வில் துவக்கத்த தருவார் – 2-எல்லாமே ஆகும்.
அவர் சொல்ல காற்றும் கூட அடங்கி போனதே
அவர் சொல்ல கடலும் கூட அமைதலானதே – 2
உன் வாழ்வில் வீசும் புயல் காற்றை தடுத்து நிறுத்துவார்
உன் வாழ்க்கை என்னும் படகில் ஏறி நடத்தி செல்லுவார் – 2 -எல்லாமே ஆகும்.