Dhinamae Naan Unnai

தினமே நான் உன்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
தினமே நானுனைத் தேடிப்பணியச்
செயும் துணையே நித்ய ஏக தெய்வமே.
அனுபல்லவி
மனநிலை தவறி மருகினேன் நானே
மாசிலானே அனுகூலநற் கோனே- தினமே
சரணங்கள்
1.அருள் நாயகனே அம்பரத் தீசா
ஆதியாய் நின்றபேர் அருள்நிறை பாசா
மருள் பவ நாசா மனுக்குல ராசா
மகிமை யடைந்தமா மகத்துவ நேசா!- தினமே
2.செத்தேன் எனக்குன் ஜீவன் அளித்தாய்
தீயனென் மேல் திருத் தீர்த்தம் தெளித்தாய்
முத்தே யென் நன்மைக் காக மரித்தாய்
மோதிய தீவினை யாவும் அழித்தாய்.- தினமே
3.திரளென் பாவங்கள் தீர்த்திட வாராய்
தீமை மறந்து நான் சீர்பெறக் கூராய்
கரள் குணமாற்றிக் கனிதெனைச் சேராய்
களிப்புடன் பாடிடக் கறுணைக்கண் பாராய்.- தினமே
தினமே நான் உன்னை பாடல் வரிகள், Dhinamae Naan Unnai lyrics