dhen tamilzhil pattaeduthu

தேன் தமிழில் பாட்டெடுத்து

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேன் தமிழில் பாட்டெடுத்து
தேவா உன்னை பாடுகின்றேன்
தேடிவந்த தெய்வம் நீரே
தினம்தோறும் வாழ்த்துகிறேன் உம்மை
தினம்தோறும் வாழ்த்துகிறேன்- தேன்
நான் வாழுகின்ற வீடவரே
நான் உண்ணுகின்ற உணவரே – 2
நான் அறுந்தும் நல் நீரே தேவா-2
வருகின்றேன் வாழ்வழியும்
தருகின்றேன் ஏற்றருளும் – 2
ஏன் வாழ்வினிலே விடியலில்லை
என் பயணமும் முடியவில்லை-2
தினம் தினமே சாகின்றேனே தேவா – 2
மண்ணானேன் மரமாக்கும்
வெயிலானேன் நிழலாக்கும் – 2
என் வியாதியிலே வாடுகின்றேன்
என் படுக்கையிலும் பாடுகின்றேன்-2
இயக்கும் நல்மருந்தே தேவா – 2
வார்த்தையதை அனுப்பிடுமே
வாதையதை போக்கிடுமே – 2
தேன் தமிழில் பாட்டெடுத்து பாடல் வரிகள், Thean Tamilzhil Paatteduthu lyrics