வரவேணும் எனதரசே – Varavenum Enatharasae

வரவேணும் எனதரசே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
வர வேணும், என தரசே,
மனுவேல், இஸ்ரவேல் சிரசே.
அனுபல்லவி
அருணோ தயம் ஒளிர் பிரகாசா,
அசரீரி ஒரே சரு வேசா! – வர
சரணங்கள்
1.வேதா, கருணா கரா, மெய்யான பரா பரா,
ஆதார நிராதரா, அன்பான சகோதரா,
தாதாவும் தாய் சகலமும் நீயே;
நாதா, உன் தாபரம் நல்குவாயே. – வர
2.படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா,
முடியா தருள் போசனா, முதன் மா மறை வாசனா,
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்,
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய், – வர
3.வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே,
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே,
ஞானா கரமே, நடு நிலை யோவா,
நண்பா, உனத நன்மையின் மகாதேவா! – வர