செல்லப்பிள்ளையல்லவா – Sellappillaiyallava

செல்லப்பிள்ளையல்லவா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

செல்லப்பிள்ளையல்லவா,
நான் உங்க செல்லப்பிள்ளையல்லவா,
என்னைக் கரம் பிடித்து,
நடத்துகின்றவர் நீரல்லவா
செல்லப்பிள்ளையல்லவா,
நான் உங்க செல்லப்பிள்ளையல்லவா,
என்னை ஆற்றி தேற்றி,
அரவணைப்பவர் நீரல்லவா, ( 2 )
1, என் கரு ஆகும் முன்னே,
என்னை கண்டு இருக்கிறீர்,
நான் பிறவாததன் முன்னே,
என்னை பேர் சொல்லி அழைத்தீர் ( 2 )
2, நான் குழந்தை ஆனபோது,
உந்தன் சிரிப்பை கொடுத்தீர்,
நான் தவழ்ந்து எழுந்த போது,
என்னை தாங்கியே பிடித்தீர் ( 2 )
3, நான் வழி விலகும் போது,
என்னை வளைந்து பிடித்தீர்,
என் நரைவயது வரைக்கும்,
என்னை நடத்துவேன் என்றீர் ( 2 )