Devathe Oor yesu Vasthu

தேவதே ஓர் ஏசு வஸ்து

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
தேவதே,ஓர் ஏசு வஸ்து, தேவநாமனாம் கிறிஸ்து
தேவன் ஆதியே நமோ
அனுபல்லவி
ஜீவ ஆவி எகோவா,அல்பா ஓமேகா நமஸ்து – ஒரு – தேவ
சரணங்கள்
1.மூவராய் அரூபியாய் முன் ஊழி ஊழி காலம் வாழ்
பாவ தாழ்விலா வலா, பராபரா, தயாபரா- ஒரு – தேவ
2.ஆதியாய் அனாதியாய்,அரூபியாய்ச் சொரூபியாய்
நீதி ஞாய நேர்மையாய் நீடுழி ஆள் சுயாதிபா- ஒரு – தேவ
3.மாசில்லா நேச வாச மட்டில்லாத நன்மையே
தேசுலா வனாதி ஏசு மா சிறந்த உண்மையே- ஒரு – தேவ
4.ஈறில்லா மெய்ஞ்ஞான ஜோதி,ஏகமாமா,ஆனந்தமே
மாறிலா தனுக்ரகஞ்செய வந்த ஆதியந்தமே- ஒரு – தேவ