devanin vaarththaiyaik kaettu

தேவனின் வார்த்தையைக் கேட்டு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவனின் வார்த்தையைக் கேட்டு
வாழ்பவன் எவனோ பாக்கியவான்
பாக்கியவான் பாக்கியவான்-2
1.வார்த்தையைக் கேட்பது அவசியமே
கேட்டிடும் விதம் அதிலும் நலமே
கேட்டதைக் தியானிப்பதே மகா பாக்கியம்
இதயத்தில் சேர்ப்பதும் இலட்சியமே
2.தேவனின் வார்த்தையில் ஜீவனுணடே
ஆவியும் வல்லமையும் நிறைந்ததுவே
மாரி போல் பனி இதயத்தை நனைக்க
வார்த்தை உன் பேரினில் இறங்கிடுமே
3.தேவனின் வார்த்தையை இதயத்திலே
நிதம் தவறாமல் நீ விதைத்திடுவாய்
முப்பதும் அறுபதும் நூறென அறுத்தே
நன்மையால் வாழ்வினில் வளம்பெறுவாய்