Deva Irakkam Illayo Yesu Deva

தேவா இரக்கம் இல்லையோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவா, இரக்கம் இல்லையோ? – இயேசு
தேவா, இரக்கம் இல்லையோ?
ஜீவா, பரப்ரமஏ கோவா, திரித்துவத்தின்
மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் , ஒரே
1. எல்லாம் அறிந்த பொருளே – எங்கள்
இல்லாமை நீக்கும் அருளே – கொடும்
பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்
கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதர்!
2. எங்கும் நிறைந்த ஜோதியே – ஏழைப்
பங்கில் உறைந்த நீதியே – எங்கள்
சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்
துங்க இசரவேலின் வங்கிஷ க்ரீடாபதி
3. வேதாந்த வேத முடிவே – ஜெக
ஆதாரம் ஆன வடிவே – ஐயா,
தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே – யேசு
நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை