deva anbe thooya anbu

தேவ அன்பே தூய அன்பே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவ அன்பே தூய அன்பு என்னை
தாங்கும் அன்பே எந்தன் உள்ளத்தை
நெருக்கி ஏவி அவரில் பெலப்படுத்தும்
பாவ உலகில் மாளும் மாந்தரை
மீட்க ஜீவன் தந்தார்
இவரின் அன்பை எடுத்துரைக்க
அவனிதனிலே கூடுமோ
மகிமை துறந்த தேவ மைந்தன்
என்னை தேடி வந்தார்
தியாக அன்பர் இயேசு ராஜன் இவரை
என்றும் போற்றுவேன்
அன்பின் அகலம் நீளம்
உயரம் ஆழம் அறிந்திடவே
மாய லோக ஆசை வெறுத்து
அவரை என்றும் நேசிப்பேன்
அன்னை அன்பிலும் மேலாய்
என்னில் அன்பு கூர்ந்தாரே உள்ளம்
கவர்ந்த அன்பிற்கீடாய் என்னை
தந்தேன் இயேசுவே
ஆதி அன்பு என்னில் விளங்க
என்னை காத்தருளும் மாறா
அன்பே நேசர் அன்பு மகிமை
செலுத்தி போற்றுவேன்