Deiva Samaathana Inba Nathiyae

தெய்வ சமாதான இன்ப நதியே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Gnanapaadalgal, Mother Mary Songs and Paamalaigal collection.

1.தெய்வ சமாதான
இன்ப நதியே
மா பிரவாகமான (மா பெருக்கான)
வெள்ளம் போலவே
நிறைவாகப் பாயும்
ஓய்வில்லாமலும்;
ஓட ஆழமாயும்
நித்தம் பெருகும்
அருள்நாதர் மீதில்
சார்ந்து சுகிப்பேன்,
நித்தம் இளைப்பாறல்
பெற்று வாழுவேன்.
2.கையின் நிழலாலே
என்னை மறைத்தார்;
சத்துரு பயத்தாலே
கலங்க விடார்,
சஞ்சலம் வராமல்
அங்கே காக்கிறார்;
ஏங்கித் தியங்காமல்
தங்கச் செய்கிறார்.
3.சூரிய ஜோதியாலே
நிழல் சாயையும் (நிழல் தோற்றமும் )
காணப்பட்டாற் போலே,
துன்பம் துக்கமும்
ஒப்பில்லா பேரன்பாம்
சூரிய சாயையே;
அதால் வாழ்நாள் எல்லாம்
சோரமாட்டேனே.
தெய்வ சமாதான இன்ப நதியே பாடல் வரிகள், Deiva Samaathana Inba Nathiyae