பாதகர்க் காய்படும் – Paathark Kaaipadum

பாதகர்க் காய்படும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
பாதகர்க் காய்படும் பாடுகளைக் கண்ணால்
பாருங்கள் பாவையரே,
அனுபல்லவி
காதகன் பாவி யூதாசு காட்டிக் கொடுக்க விண்ணைக்
காட்டும் கல்வாரி மலைக் ‘கோட்டில் நம்பிணையாளி
சரணங்கள்
1.பக்தர் பெருமான் இரு கைத்தலம் விரிக்கிறார்,
பாவியைப் போல் வதை மேவி உத்தரிக்கிறார்,
*பெத்தம் உளமனத்தார் சுத்திக் கொக்கரிக்கிறார்,
பேதை மரி தன் மார்பில் மோதி ஆ குலிக்கிறார்,
2.கள்ளர், கயவர், பலர் துள்ளித் தூஷணிக்கிறார்,
காடி கலந்த கடற் காளானைத் திணிக்கிறார்,
வள்ளல் செவி யுளைக்கும் வார்த்தைகள் பிணைக்கிறார்,
மாறுபாடுள்ள ‘ரவி மார்புறக் கணிக்கிறார்.
3.கைவிட்டதென வென்று கலங்கிநின் றழுகிறார்,
காயுநின் மலன் கோபத் தீயினில் முழுகிறார்,
மையுற்ற கொலைஞர்க்காய் மன்றாடித் தொழுகிறார்;
வானோர் அரசன் ஏழு வாக்கிய மொழிகிறார்.
4. “மாலுற்ற திருவுடல் ‘லேற்று நழுவுதே,
மாற்றல ரிற்கொடிய கூற்றுயிர் பிழியுதே
பாலுற்ற நறுவிலா வேல்பட்டுக் கிழியுதே,
‘பாணியும் குருதியும் தோணியே வழியுதே.
பாதகர்க் காய்படும் பாடல் வரிகள், Paathark Kaaipadum Lyrics