எல்லாம் ஏசு மயம் ஜெகம் – Ellaam yesu Mayam Jegam Lyrics

எல்லாம் ஏசு மயம் ஜெகம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
எல்லாம் ஏசு மயம் ஜெகம்
எல்லாம் ஏசு மயம்.
சரணங்கள்
1.பல்லாயிரங் கோடி படைப்புகள் யாவும்,
பரலோகம், பூலோகம், பாதாள லோகம்
2.அண்ட சரா சரம், ‘ஆதித்தன், ‘அம்புலி,
அரிய ‘தராகணம், அக்கினி, காற்றுமே.
3.சத்திய வேதமும் சார்ந்த ‘நூலாகமம்
சாஸ்திரமொடு திருச் சபை அலங்காரமும்,
4.ஆலயந் தோறு மெய் அன்பர் செய் பஜனையும்
அடியர் ஜெபங்களும் ஆராதனைகளும்.
5. ஜெனித்தல், இறத்தலொடு ஜீவனோடுயிர்த்தலும்,
ஜெயக் களிப்போடு நித்ய ஜீவனைப் பெறுதலும்