இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க – Irupeerayutham yesuvai santhika

இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

பல்லவி
இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க!
அனுபல்லவி
வருவார் நினையாமலே – திண்ணம்
வான்முகில் மீது சீக்கிரம்!
சரணங்கள்
1. மண்ணுறும் சகல மாந்தரங் காணவே
மன்னனேசுதான் விண்ணரோடுமே
மகிமையாகவே தோன்றுவார் – இருப்பீராயத்தம்
2. ஊதும் எக்காளம் ஓசையாய்த் தொனிக்கையில்
பூதங்கள் பஸ்பமாகி வானமும்
பூமியும் வெந்தழிந்து போம் – இருப்பீராயத்தம்
3. கர்வங்கொண்டதோர் பாவிகள் யாவரும்
கர்த்தனார் வருங்காலத்தினவர்
கவலையுற்றதால் அலறுவார் – இருப்பீராயத்தம்
4. புத்தியுள்ள ஐங்கன்னிகள் போல் தேவ
பத்தனாய்ப் பரிசுத்தனாய் முழுத்
தத்தஞ் செய்துமே நித்தமும் – இருப்பீராயத்தம்
5. ஜீவ ஓட்டத்தில் திருடனைப் போலவே
சாவுதான் வரும் தப்பொணாது நீர்
தாவி மீட்பரைச் சார்ந்ததுமே – இருப்பீராயத்தம்
6. தேவனார் தீர்ப்புச் செய்யு மவ்வேளையில்
பாவியே! வலப்பக்கம் நின்றிட
பாவ மன்னிப்புப் பெற்றிங்கே – இருப்பீராயத்தம்
இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க பாடல் வரிகள், Irupeerayutham Yesuvai Santhika Lyrics