Christmas vantha innalilae christmas song lyrics

கிறிஸ்மஸ் வந்த இந்நாளிலே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

கிறிஸ்மஸ் வந்த இந்நாளிலே
மனிதர் மனதில் மகிழ்ச்சியாமே
விண்ணும் மண்ணும் புகழ்ந்து பாடும்
பாலன் இயேசு பிறப்பினாலே
பாரில் இயேசு பாலன் பிறந்தாரே
என்று பாட – வானில் வரவேற்க
சுக ராகம் தூதர் பாட
மாசற்ற தேவன் பொன்மேனியாய்… ஓ
ஆத்மாவை மீட்க நரராகினார்
நம் சாந்த இயேசு மனிதனின்
சாயலாய் சாயலாய் – பூலோகமதில்
வந்த நல் செய்தியை செய்தியை
வானில் விடிவெள்ளி காட்டவே
மேய்ப்பர் அதிசயித்துக் கலங்கவே
எனை மீட்க வந்த இயேசு
ராஜன் என்றே மகிழ்ந்தனர்
தேவாதி தேவன் பிறந்த நல்
செய்தியை செய்தியை – வான்
சாஸ்திரிகள் ஞானிகள் மூவரும் மூவரும்
அரிய பொன் வெள்ளைப்போளவும்
தூபவர்க்கமும் கொண்டுமே
பொன் பாதம் படைத்துவணங்கி
சென்றனர் கிறிஸ்துமஸ் நாளிலே