Chord Fmin

சொந்த பந்தம் கூட இல்ல
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Chord Fmin
சொந்த பந்தம் கூட இல்ல
சொத்து சுகம் நாடவில்ல
நீங்க மட்டும் எனக்கு போதும் ராஜா
போதும் ராஜா நீங்க
(எந்தன் இயேசு ராஜா) போதும் ராஜா
நீங்க மட்டும் எனக்கு போதும் ராஜா
1.அனாதையை போல்
அலைந்து திரிந்தேன்
ஆறுதல் சொல்ல யாருமே இல்ல
என்னை தேடி வந்த
அன்பு தெய்வம் நீங்க
என்னை தெரிந்து கொண்ட
பாச தெய்வம் நீங்க
2.கண்ணீரில் நான் மூழ்கி கிடந்தேன்
துக்கிவிட யாருமே இல்ல
என்னை தேற்றுகிற
அன்பு தெய்வம் நீங்க
என்னை அரவணைத்த
பாச தெய்வம் நீங்க
பிறந்த நாள் முதல் உம சார்பில் விழுந்தேன்
துணை நிற்க கூட யாருமே இல்ல
என்னை ஆதரித்த
அன்பு தெய்வம் நீங்க
என்னை உயர்த்தி வைத்த
பாச தெய்வம் நீங்க