Chinnapillaigale Chella pillaigalae

சின்ன பிள்ளைகளே செல்ல பிள்ளைகளே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Chinnapillaigale Chella pillaigalae – சின்ன பிள்ளைகளே செல்ல பிள்ளைகளே
சின்ன பிள்ளைகளே செல்ல பிள்ளைகளே
வரை சொல்லும் கதை கேளுங்கள்
1.பட்டணம் ஒன்றிலே இரண்டு மனிதர்கள்
ஒரு மனிதன் தரித்திரன்
இன்னொருவன் தனவந்தன் -2
ஆடு மாடுகள் ஏராளம்
தனவந்தன் சீருடன் வாழ்ந்தான்-2
2.எளியவன் அவனுக்கோ
ஒரே ஒரு ஆட்டுக்குட்டி
சின்ன ஆட்டுக்குட்டி
அது செல்ல ஆட்டுக்குட்டி-2
வாயின் அப்பத்தை தின்று வளர்ந்தது
ஏழைக்கு மகனாய் இருந்தது-2
3.நன்னாள் ஒன்றிலே
வழிப்போக்கன் வந்தான்
தனவந்தன் வீட்டிற்கு விருந்தினராய் வந்தான்-2
விருந்து செய்யவே ஆடு அடிக்க
ஏழையின் ஆட்டை அடித்தான்-2
4.நியாயம் ஆகுமா இது நியாயம்ஆகுமா
இப்படி செய்தால் இயேசு பொறுத்து கொள்வரார்-2
எளியவன் சார்பில் யுத்தம் செய்வார்
வலியோரை நியாயம் தீர்ப்பார்-2