Chinnanchiru Paalanaai Yesu Song lyrics

சின்னஞ்சிறு பாலனாய் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

சின்னஞ்சிறு பாலனாய் இயேசு பாலன் பிறந்தார்
கன்னிமரி மைந்தனாய் இயேசு பாரில் பிறந்தார்
விண்ணில் மகிமை மண்ணில் சந்தோஷம்
கைகள் தட்டி தாளம் போடுவோம்
பாலன் இயேசுவை வாழ்த்திடுவோம்
பனி விழும் இரவில் கடும் குளிர் வேளையில்
புல்லணை மீதினில் இயேசு பிறந்தார்
தூதர் சேனை ஒன்றாய் கூடி
மகிபனை வாழ்த்திப்பாடினர்
தீரக்கர் உரைப்படியே ஏழைக் கோலமாக
மேசியா இயேசு ராஜன் பாரில் வந்துதித்தார்
கிழக்கில் இருந்து சாஸ்திரிகள் மூவர்
பாலன் இயேசுவைத் தேடி வந்து
இயேசுவின் பாதத்தில் காணிக்கைப் படைத்து
பணிந்து வணங்கினரே
மண்ணின் மைந்தர்களின் பாவம் போக்கிடவே
மேசியா இயேசு ராஜன் பாரில் வந்துதித்தார்