Bless India Jesus

இந்தியா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Bless India Jesus – Bless இந்தியா Jesus
Bless இந்தியா ஓ .. ஓ .. Bless இந்தியா
Bless இந்தியா Jesus Bless இந்தியா
1.நூறு கோடி ஜனங்கள் வாழும்
எங்கள் இந்தியா ஆசீர்வதியும் தேவா
ஏழு லட்சம் கிராமம் பட்டணங்கள்
ஆயிரம் ஆசீர்வதியும் தேவா -2
பல பல பாஷை, கலாச்சாரங்கள்
ஒன்றையே எங்கள் மனம்
பல பல இனங்கள், வம்ச வழிகள்
ஒன்றையே எங்கள் ஜெபம்
இந்தியாவின் மேலே கைகளை
வைத்து ஆசிர்வதித்திடுமே -2 – Bless India
2.இந்திய நதிகள் யாவும்
ஒன்றாய் இணைய வேண்டும் தேவா
பஞ்சம், பட்டினி, வெள்ளம்
கொடுமை நீங்க வேண்டும் தேவா -2
கொலை, களவுகள்,தீவிரவாதங்கள்
ஒழிய வேண்டும் தேவா
ஒரு தாய் பிள்ளை இந்தியர் நாமென்ன
உணரவேண்டும் தேவா
இந்தியாவின் மேலே கைகளை
வைத்து ஆசிர்வதித்திடுமே -2 – Bless India
3.மாநிலம் யாவும் ஒருமணமாக
திகழ வேண்டும் தேவா
ஜாதி மதங்களை பேதங்கள் இன்றி
வாழ வேண்டும் தேவா
இந்தியா வாலிபர் உலகமெங்கிலும் (அகிலமெங்கிலும்)
ஜொலிக்க வேண்டும் தேவா
இந்திய தேசத்தின் தலைவர்கள் எல்லாம்
இனைய வேண்டும் தேவா
இந்தியாவின் மேலே கைகளை
வைத்து ஆசிர்வதித்திடுமே -2 – Bless India
I Love My India My Lord -3