Bayam Illaiye Enakku

பயம் இல்லையே எனக்கு
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பயம் இல்லையே எனக்கு
பயம் இல்லையே
இயேசு என்னோடிருப்பதால்
அவர் நேற்றும்
இன்றும் என்றும் மாறிடார்-2
இயேசு வல்லவர்
இயேசு நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே-2 – பயம்
1.வானம் பூமி யாவையும்
வார்த்தையால் படைத்தவர்-2
வல்லமை தேவன் இயேசுவின்
வசனமே நித்திய ஜீவன்-2 – பயம்
2.வழியும் சத்தியமும் ஜீவனும்
ஒளியாய் வந்தவர்-2
இருளின் பயங்கள் யாவையும்
இமைப்பொழுதில் நீக்கிடுவார்-2 – பயம்
3.விடுவிக்கும் தேவன் இயேசு
இன்று விடுதலை தருகின்றார்-2
கட்டுகள் யாவையும் உடைத்திடுவார்
புது பெலன் இன்றேஅளித்திடுவார்-2 – பயம்