balavaana munthikattu

பலவான முந்திகட்டு முந்தி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பலவான முந்திகட்டு,
முந்தி கட்டு, முந்தி கட்டு,
அவன் பலத்தையே ஒழித்துக் காட்டு
சாத்தான முந்தி கட்டு, முந்தி கட்டு,
முந்தி கட்டு, அவன் சதி
நாசத்த ஒழித்து கட்டு ஒழித்து கட்டு
துதியினால் உன் ஜெபத்தினால்
அவன் சதிநாசத்த ஒழித்துக்காட்டு
ஆவியின் பட்டயத்தை எடுத்து
அவன் ஆங்காரத்தை ஒரு நொடியில் அடக்கு
உன் ரீங்கார சத்தத்தை கேட்டா – அவன்
ஓங்காரம் அடங்குது பாரு
சர்வாயுத ஆயுதத்தை எடுத்து – உன்
விசுவாச கேடயத்தை பிடித்து
ஆயத்தத்தின் பாதரட்சை அணிந்து
சமாதானத்தின் சுவிஷேம் சொல்லு
எரிகின்ற அக்கினியின் வல்லமை – அவன்
கிரியைகளை சுட்டெரிந்து அகற்றும் – அவன்
தந்திர மந்திரங்கள் எல்லாம்
ஒரு நொடி பொழுதில் சுக்கு நாறாக உடையும்
கல்வாரி சிலுவையின் இரத்தம்
என்னை மாற்றிடும் அபிஷேக தைலம்
கழுகு போல் புது பெலனடைந்து
என்னை கன்மலையின் மேல கொண்டு நிறுத்தும்