எனைத் தேடி வந்தீர் – Enai Thedi Vandheer Lyrics

எனைத் தேடி வந்தீர்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி:
எனைத் தேடி வந்தீர்
எனைக் காக்க வந்தீர்
இரு கருவில் ஓர் கருவாய்
நான் கலையாமல் உயிராக்கினீர்
எனக்காக வந்தீர்
எனை மீட்கவே வந்தீர்
நான் வழிமாறி விலகாமல்
துணையாய் கூட நிற்கிறீர்
என் துன்பமோ துயரமொ
வியாதியோ வறுமையோ
உம் கரத்தையே நீட்டியே
என் வாழ்வை மாற்றினீர்
தடுமாற்றமோ தடைகளோ
ஏமாற்றமோ தோல்வியோ
எனக் ஆறுதல் சொல்ல
இயேசு நீங்க போதுமே
1.சரணம்:
அன்பு காட்ட யாருமில்ல
நானும் சாய தோளுமில்ல
இருந்தபோதும் நீங்க மட்டும்
என்ன விட்டு போகல,,!
சூழ்நிலைகள் அலையாய் மலையாய்
துரத்தி அடிச்சு விழுந்தாலும்
கையை பிடிச்சு தூக்கி எடுக்க
என்நேசர் நீர் வேண்டுமே
என் வாழ்வே நீர்க்காட்டின
இரக்கத்தின் சாட்சியே
உம் தயவில் நான் வாழ
என்றும் எனக்கிது போதுமே,,
என் ஆசை நிறைவேற்றினீர்
உமை என்றும் பாடுவேன்
உம் ஓசை நான் கேட்க.
என்னை பரிசுத்த படுத்துமே – எனைத் தேடி..
2. சரணம்:
ஏழைக்காக இறங்குபவன்
உமக்கு கடன்
கொடுக்கிறவன் என்ற
வாக்குதத்தம் எனக்கு தந்து
என் வாழ்வை நீர் தொடங்கினீர்
உம் வேளை வர காத்திருக்க
உம் கிருபை எனக்கு தந்தருளும்
என்னை குறித்த உங்கத்திட்டம்
என் வாழ்வில் நிறைவேற்றுமே
எனக்காக தடை யாவையும்
தகர்த்தெறிந்த தேவனே
உமக்காக ஒரு கூட்டம்
நான் ஆயத்த படுத்துவேன்
உம்மோடு நான் வாழவே
என் மனமும் ஏங்குதே
உம் மகனாய் என்னை மாற்றி
உம் வழியிலே நடத்துமே – எனைத் தேடி..
3.சரணம்
நம்பி போன மனுஷனெல்லாம்
உதவி செய்ய முன்வரள
என் தேவைகளுக்கும் அதிகமான
உதவி செய்து உயர்த்தினீர்
துக்கப்பட்ட நாட்களுக்கும்
அதிகமாக மகிழ செய்தீர்
காத்திருந்த காலத்திற்கு
ஏற்ற பதிலை தருகீறீர்
இவ்வுலக ஏக்கமெல்லாம்
எனை சூழ்ந்த போதிலும்
என் தேவா உம் நோக்கம்
என் மனதிலே வைக்கிறீர்
நீர் செய்த நன்மைகளை
தினம் நினைத்து போற்றுவேன்
உம் வருகை வரும்போது
உம்மோடு நான் சேருவேன் – எனைத் தேடி