கிருபை கூர் ஐயா – Kirubai Koor Aiyaa

கிருபை கூர் ஐயா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

பல்லவி
கிருபை கூர் ஐயா – உந்தன்
அறிவில் தேற்றையா! – என்மீது
அனுபல்லவி
சிறியேன் நானையா – பாவ ஜென்மிதானையா! – நான்
நெறி யேகிட பெலம் நல்கிட – வேண்டுறேனையா!
1. புவனமேல் மா புண்ணியவான் புனிதனேசுவே!
தவனமுறும் ஆன்மாதனை தாங்கி மீட்பீரே! – உம்
பவனமாகவே நான் – என் மனதைப் பற்றுமேன்!
கவனமாக நான் கர்த்தா! உன்னைக் கண்டடையச் செய்யுமேன் – என்மீது
2. தீமை செய்ய நாடு தெந்தன் திருக்கு நெஞ்சமே!
நேர்மை பெற நினை யல்லாது யாரென் தஞ்சமே!
வாய்மை பஞ்சமே! தெய்வ வணக்கம் கொஞ்சமே!
தாழ்மையாய் உந்தன் தாழ்பணிந்தேன் தாராய் உன் தஞ்சமே – என்மீது
3. பரத்தை நோக்க மனமுமற்ற பதடி நான் ஐயோ!
சிரத்தை கொண்டு ஓட உந்தன் ஜீவ பாதையோ,
வருத்தமா மையா உயர் வலிமை தா ஐயா!
கர்த்தனே எந்தன் காட்சி கண்டு நான் களிக்கச் செய் மெய்யாய் – என் மீது