azhinthitum janaththirkay

இயேசுவே தாருமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அழிந்திடும் ஜனத்திற்காய்
அழுதிட வேண்டுமே
ஆத்தும பாரத்தினால்
நிறைந்திட வேண்டுமே
இயேசுவே தாருமே ஆத்தும பாரமே
ஆயுளெல்லாம் என் ஆசை அதுவே
ஆகாரம் அதுவே
1.என் ஜனம் மேல் வரும் பொல்லாப்பை
நான் கண்டு ஏங்குகின்றேனையா
ஏழை நான் இப்போதே
எப்படியும் எந்தன் இந்திய ஜனங்கள்
இயேசுவை அறிந்திட என்னையே தருகிறேன்
2.திறப்பிலே நின்றிடும் தேவ மனிதனாய்
தினமும் என்னை நீர் மாற்றிடும் தெய்வமே
தீமைகள் வெறுத்திட
தூயோனாய் வாழ்ந்திட
தேவ பெலன் என்னுள் தாரும் என் தெய்வமே
3.தூய ஆவியின் நல்ல துனையோடு தினமும்
தேவனின் பாரத்தை உணர்ந்திட வேண்டுமே
உண்மையாய் ஜெபித்து ஊழியம் செய்திட
உணர்வுள்ள இருதயம் இன்றே தாருமே