azhake azhake ummai parkka ventume

அழகே அழகே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அழகே அழகே உம்மை பார்க்க வேண்டுமே
நிறைவாய் என்னில் நீர் வர வேண்டுமே
என்ற வாஞ்சை என்னில் பெருகுதே
உம்மில் உள்ள அன்பின்
ஆழம் கூடுதே
பதினாயிரங்களில் சிறந்தவர் நீரே
மருதோன்றிப் பூங்கொத்தும்
கிச்சிலிப் பழமுமே
அழகே.- 2
பெருவெள்ள இரைச்சல் போல உந்தன் சத்தம் இருந்தாலும்
மெல்லிய சத்தமாய் என்னை அழைத்தீரே
அக்கினி ஜுவாலை போன்ற கண்கள் உமக்கு இருந்தாலும்
புறாவின் கண்களால் என்னை நோக்கினீர்
உங்க அழகும் அன்பும்
பார்க்கும் போது
இதயம் ஏங்குதே
என் நேசருக்காய் வாழ்நாளெல்லாம்
காத்துக் கிடப்பேன் -2
அழகே அழகே
உம்மை பார்க்க வேண்டுமே
விரைவாய் என்னில் நீர்
வர வேண்டுமே.
நட்சத்திரங்களை வலக்கரத்தில் ஏந்தி வைக்கும் நேசர்
என்னை உம் உள்ளங்கையில்
வரைந்து வைத்ததும் ஏனோ
கண்ணின் கண்மணிப் போல் என்னை இரவும் பகலும்
உம்மை விட்டுப் பிரியா உறவாய் வைத்ததென்ன
பதினாயிரங்களில்
சிறந்தவர் நீரே
மருதோன்றிப் பூங்கொத்தும்
கிச்சிலிப்பழமுமே - 2
அழகே