azhakadalil meengal palavundu

அழைக்கடலில் மீன்கள் பலவுண்டு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அழைக்கடலில் மீன்கள் பலவுண்டு
அதையும் பிடித்திட மீனவர் பலருண்டு
அழியும் ஆத்துமாக்கள் உலகில் பலவுண்டு
அதற்காய் பரிதவிக்க இங்கே யாருண்டு
யாரை அனுப்புவேன்
யார் என் வேலையாய் போவார் ஓ ..ஓ …
1. அலையை போலவே அலைந்து திரிந்திடும்
அமைதியை இழந்து அதிபதி அடைந்திட்ட
அநேகம் பேருண்டு அழைத்திட யாருண்டு
அநேகம் பேருண்டு அணைத்திட யாருண்டு
அநேகம் பேருண்டு மீட்டிட யாருண்டு
அநேகம் பேருண்டு மீட்டிட நீ உண்டு
2. சிலுவை அன்பினை சற்று அறியாமல்
சிந்திய இரத்தத்தின் மகத்துவம் உணராமல்
ஜீவிக்கும் மக்களை நேசிக்க யாருண்டு
ஜீவனை கொடுத்தவர் இயேசுவே தானுண்டு
ஆண்டவர் இயேசுவை அறிவிக்க யாருண்டு
ஆண்டவர் தேடிடும் மனிதன் நீ உண்டு