ayiram madangu uyaruven

ஆயிரம் மடங்கு உயருவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆயிரம் மடங்கு உயருவேன்
என் இயேசுவின் நாமத்தினாலே
சந்துருவின் சாதிகளை முறியடிப்பேன்
என் இயேசுவின் நாமத்தினாலே
1. முடியாதென்று உள்ளம் சொன்னாலும்
உந்தன் பெலத்தால் எல்லாம் முடித்தீரே
வாழ்க்கை முடிந்ததென்று உலகம் சொன்னாலும்
புதிய துவக்கத்தை என்னுள் தந்தீரே
நினைத்து பார்க்காத அற்புதங்கள் செய்தீரே
எண்ணுக்கடங்காத நன்மைகளை தந்தீரே
நன்றி நன்றி ஐயா
உமக்கு நன்றி ஐயா
2. நாட்கள் கடந்ததென்று என் உள்ளம் ஏங்கினாலும்
குறித்த காலத்திலே நன்மைகளை தந்தீரே
தீமைகள் துரோகங்கள் என்னை சூழ்ந்து நின்றாலும்
நன்மையையும் கிருபையும் என்னை தொடர செய்தீரே
கண்ணீரை எல்லாம் கலிப்பாக மாற்றினீர்
கம்பீரத்தோடு அறுவடையை துவாக்கினீர்