Avarai Pinpatruvaen song lyrics

அவரை பின்பற்றுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Verse 1:
ஏன் என்ற கேள்விகள்
அனுதினம் நம் வாழ்வை சூழ்ந்திடும்
விடை அறியா தருணங்கள்
நம் விசுவாசத்தை உலுக்கிடும் -2
விடைகள் இன்றி போனாலும்
நேசர் அன்பு சூழ்ந்து கொள்ளும்
ஜீவன் தந்த அன்பின் முன்
சந்தேகம் சிதையும் -2
Chorus:
நான் அவரை பின்பற்றுவேன்
அழியும் மேன்மைக்காக அல்ல
நான் அவரை பின்பற்றுவேன்
அழியா மறுமைக்காக அல்ல
நான் அவரை பின்பற்றுவேன்
எந்த சூழ்நிலைகள் வந்தும்
நான் அவரை பின்பற்றுவேன்
அவர் அன்பு ஒன்றே போதும்
Verse 2:
பாடுகள் நெருக்கும் போது
நேசரின் அன்பு உண்டு
அவர் அளிக்கும் ஆறுதல்
விவரிக்க யாருண்டு -2
மரணத்தில் வலியதது
இயேசுவின் நேசமது
ஜீவன் தந்த அன்பிற்கு
என்ன நான் செய்வேன் -2
Chorus:
நான் அவரை பின்பற்றுவேன்
அழியும் மேன்மைக்காக அல்ல
நான் அவரை பின்பற்றுவேன்
அழியா மறுமைக்காக அல்ல
நான் அவரை பின்பற்றுவேன்
எந்த சூழ்நிலைகள் வந்தும்
நான் அவரை பின்பற்றுவேன்
அவர் அன்பு ஒன்றே போதும்
Bridge:
மரணமானாலும் ஜீவனானாலும் – தேவ
தூதரானாலும் பிரிக்க முடியுமோ – இவ்வுலக
உயர்வானாலும் தாழ்வானாலும் – எந்த
சிருஷ்டியானாலும் உம்மை பிரிக்க முடியுமோ
Chorus:
நான் அவரை பின்பற்றுவேன்
அழியும் மேன்மைக்காக அல்ல
நான் அவரை பின்பற்றுவேன்
அழியா மறுமைக்காக அல்ல
நான் அவரை பின்பற்றுவேன்
எந்த சூழ்நிலைகள் வந்தும்
நான் அவரை பின்பற்றுவேன்
அவர் அன்பு ஒன்றே போதும்