Avar Namam Lahai Roi Lyrics

லகாய் ரோயீ
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னைக் கண்டவரை
நானும் கண்டேனே
அவர் நாமம் லகாய் ரோயீ
என்னை காண்பவரை இங்கு கண்டேனே
அவர் நாமம் லகாய் ரோயீ
நீர் என்னை காண்கின்ற தேவன்
1. துரத்தப்பட்ட ஆகாருக்கு
துரவை திறந்து மகிழச் செய்து
அவள் தவிப்பை மாற்றின தேவன்
அவர் நாமம் லகாய் ரோயீ
2. கர்ப்பம் அடைத்த அன்னாளுக்கு
கர்ப்பம் திறந்து பிள்ளை கொடுத்து
அவள் அழுகையை மாற்றின தேவன்
அவர் நாமம் லகாய் ரோயீ
3. ஜீவன் போதும் என்று சொன்ன
எலியாவை கர்த்தர் கண்டு
உணவளித்து நடத்தினாரே
அவர் நாமம் லகாய்ரோயீ