athikalaiyil en kanavinil

அதிகாலையில் என் கனவினில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அதிகாலையில் என் கனவினில்
இயேசு ராஜன் தோன்றினாரே
தீர்மானங்கள் நிறைவேற்றுங்கள்
இது கடைசி தருணம் என்றார்
சீக்கிரமாக வருவேன் என்றார்
பாவம் யாவும் விலக்க செய்தார்
சாட்சியாக வாழச் சொன்னார்
வறுமை தீயை அழித்தவர்
நேற்று செய்த உந்தன் பாவ பாரங்களை
மீண்டும் நீயும் இன்று சுமப்பாயோ?
சேற்றில் வாழ்ந்த உந்தன் வாழ்க்கைப் பாதையை
நாளை நீ கடந்து செல்வாயாம்
கசக்கும் தீமையா? அன்பின் தெய்வமா?
உலக இச்சையா? மறுமை இன்பமா?
உன்னை அழைக்கும் தேவனைப் பார்
உனக்கும் விடுதலை பரப்பில் நிச்சயம் உண்டு
வன்புறைகளும் யுத்த பூமியும்
அன்புக் கிறிஸ்துவின் அரசாங்கம்
வீழ்ந்த சீற்றங்கள் இயற்கை மாற்றங்கள்
இரண்டாம் வருகையின் அடையாளம்
வானம் திறக்கவே வருவார் தேவனே
ஆனந்தமாகவே பூமி மாறுமே
கண்ணீர் இல்லை கவலை இல்லை
ஆயிரமாயிரம் ஆண்டுகள் மகிழுவோம்