athikalai velaiyil thetukinren

அதிகாலை வேளையில் தேடுகின்றேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அதிகாலை வேளையில் தேடுகின்றேன்,
என் முழு உள்ளத்தோடு, நாடுகின்றேன்;
உம் திருப் பிரசனத்தை, வாஞ்சிக்கிறேன்,
நீர் என்னில் தங்கிட வேண்டுகிறேன் -(2)
(Chorus)
வேண்டுதல் கேட்பவரே,
உம்மையே நம்பியுள்ளேன் -(4)
1) வருஷத்தை நன்மையால்,
முடிசூட்டும் தெய்வமே,
குறைவுகள் யாவையும்,
நிறைவாக்கித் தாருமே -(2) – (வேண்டுதல்)
2) சுகம் தரும் தெய்வம் நீர்,
பெலன் தரும் தெய்வம் நீர்,
இது வரை தாங்கினீர்,
இனிமேலும் தாங்குவீர் -(2) – (வேண்டுதல்)
3) மன்னிக்கும் தெய்வமே,
இரக்கத்தின் சிகரமே,
நீச பாவி என்னை,
ஒருமுறை பாருமே -(2)
வேண்டுதல் கேட்பவரே,
உம்மையே நம்பியுள்ளேன் -(4)
வேண்டுதல் கேட்பவரே,
உம்மையே நம்பியுள்ளோம் -(4)
வேண்டுதல் கேட்பவரே,
உம்மையே நம்பியுள்ளோம்
அதிகாலை வேளையில் தேடுகின்றேன் பாடல் வரிகள், Athikalai Velaiyil Thedugindren Lyrics